பெங்களூரு:

ர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு வரும் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜக பிரமுகர் வீட்டில் இருந்து பண்டல் பண்டலாக வாக்காளர் அட்டை கண்டுபிடிக்கப்பட்டது. இதைக்கண்ட தேர்தல் அதிர்ச்சி அடைந்தனர்.

கர்நாடகா சட்டசபைக்கு மே 12-ல் நடக்கிறது. மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு பெங்களூரு ராஜராஜேஸ்வரி சட்ட மன்ற தொகுதியில் பாஜ பிரமுகருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்  அடையாள அட்டைகள், பிரிண்டர்கள் , லேப்டாப்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் கோரி வருகிறது.

வாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றப்பட்டதை  உறுதி செய்த கர்நாடகா தலைமை தேர்தல் ஆணையர் சஞ்சீவ் குமார் செய்தியாளர்களிடம்  கூறியதாவது,

ராஜராஜேஸ்வரி நகரில் ஜலஹள்ளி என்ற இடத்தில் உள்ள எஸ்எல்வி பார்க் வியூ  அடுக்குமாடி குடியிருப்பின் 115வது எண் உள்ள குடியிருப்பில்  ரெய்டின்போது 9,476 வாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றப்பட்டது, அவைகள் உண்மையான வாக்காளர் அட்டைகள், அவைகள் கட்டுக்கட்டாக கட்டி வைக்கப்பட்டிருந்தது என்று கூறினார்.

இவ்வளவு அடையாள அட்டைகள்  எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அந்த தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது.

ஆனால், காங்கிரஸ் தோல்வி பயத்தில் பாஜமீது பழிபோடுவதாக மத்திய அமைச்சர் அனந்தகுமார் டுவிட் செய்துள்ளார்.

ஆனால், இந்த சம்பவம் குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.