புரோ கபடி லீக்: அதிரடி ஆட்டத்தின் மூலம் கோப்பையை வென்றது பெங்களூரு அணி!

புரோ கபடி லீக் போட்டியில் குஜராத அணியை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையை வென்றது. இறுதி போட்டியில் குஜராத் ஃபார்சுன் ஜெய்ண்ட்ஸ் அணியை 38-33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பெங்களூரு புல்ஸ் அணி வெற்றிப்பெற்றது.

bengaluru

6வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் ப்ளே-ஆப் சுற்றுகளில் வெற்றிப்பெற்ற பெங்களூரு புல்ஸ் மற்றும் குஜராத் ஃபார்சுன் ஜெயண்ட்ஸ் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில் கோப்பையை வெல்லும் இறுதி போட்டி மும்பையில் நடைபெற்றது. போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜாராத் அணி வீரர்கள் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 16-9 என்ற புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்தனர். இதனால் கோப்பையை குஜராத் அணி வெல்லப்போவதாக அனைவரும் கருதினர்.

kabadi

ஆனால், போட்டியின் இரண்டாவது பாதியில் பெங்களூரு அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். அந்த அணியின் பவன் ஷெராவத் அதிரடியாக விளையாடி 25 ரெய்டுகளில் 22 புள்ளிகள் எடுத்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதன் காரணமாக இறுதியில் பெங்களூரு புல்ஸ் அணி 38-33 புள்ளிகள் கணக்கில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது. இதனை தொடர்ந்து வெற்றிப்பெற்ற பெங்களூரு அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.