பெங்களூரு :
ந்தியாவில் கொரோனா வைரஸ் எனும் நரக வேதனையை அனுபவித்துவரும் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பச்சை மண்டலத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில், மதுபான கடைகளை திறக்க அனுமதித்துள்ளது தளர்வுகளை எல்லாம் சரிசெய்ய கூடிய அறிவிப்பாக உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க இருக்கும் நிலையில், பெங்களூரை சேர்ந்த குடிமகன்கள் ‘சொர்கம் மதுவிலே’ என்று ஆட்டம் போடாத குறையாக உள்ளனர்.

பார்கள் இல்லாத தனிகடைகளை மட்டுமே திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளதால், கிளப், பப், பேமிலி ரெஸ்டாரண்ட் என்று சென்ற குடிமகன்கள் நாளை தனிக்கடைகளை நாடி பொங்கிவருவதை தவிர்க்க, பெங்களுரில் பல்வேறு ஒயின் ஷாப்புகள் இவர்களை வரவேற்க தயாராகிவருகின்றன.
40 நாட்களாக கட்டிக்காத்த லிமிட்டை இனியும் காப்பாற்றுமா கர்நாடகா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.