பண மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய கர்நாடக காவல்துறை தீவிரம்

பெங்களூரு:

ண மோசடி வழக்கு காரணமாக  முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய கர்நாடக காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக அவர்மீது லுக் அவுட் நோட்டீஸ் விநியோகிகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் சுரங்க தொழிலில் கொடிகட்டி பறப்பவர் ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள்.  தொழிலதிபர், அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்ட இவர், கடந்த பா.ஜ.க., ஆட்சியின் போது மாநில அமைச்சராக பதவி வகித்தவர்.

இவர்கள் மீது  நிதி மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், சுரங்க மோசடி வழக்கில் சிக்கி சிறை சென்ற ஜனார்த்தன ரெட்டி, தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, நாடு முழுவதும் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ரூ.650 கோடி செலவில் தனது மகளின் திருமணத்தை ஆடம்பலமாக நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, வருவமான வரித்துறை ரெய்டும் நடைபெற்றது.

இந்த நிலையில்,  பொதுமக்களிடம் பல கோடி வசூலித்து ஏமாற்றியதாக அம்பிடண்ட் நிறுவனம்  மீது வழக்குப்பதிவு செய்து அந்த நிறுவனத்தின்  சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாகக் கூறி அம்பிடண்ட் நிறுவன அதிபரிடம் ரெட்டி ரூ,.21 கோடி அளவில்  மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்து.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பிவிடாமல் இருக்கும் வகையில் நாடு முழுவதும் லுக்அவுட் நோட்டிஸ் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜனார்த்தன ரெட்டி ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.