பெங்களூரு:

போலியான பாஸ்கள் மூலம் ஏராளமானோர் ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்று வருவது குறித்து புகார் எழுந்தது. இதையடுத்து, சாலை தடைகளை மாநில காவல்துறை அதிகப்படுத்தி, பலரை மடக்கி விசாரித்தபோது, ஏராளமானோர்  போலியான காரணங்கள் கூறி பாஸ் பெற்று உள்ளதும், பலர் போலி பாஸ்களை வைத்துக்கொண்டு காவல்துறையினரை ஏமாற்றி சுற்றி வந்ததும்தெரிய வந்துள்ளது.  இதையடுத்து, போலி பாஸ்கள் பெற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியே சென்று வர அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனால், இதை பலர் தவறாக பயன்படுத்தி வருவதாக  கூறப்பட்டது.

அவசரம் மற்றும் அதியாவசிய தேவைக்கு வெளியே செல்வோருக்கு காவல்துறை தரப்பில் பாஸ்கள் வழங்கப்பட்டன. ஆனால், பலர் போலியான ஆவனங்களைக் கொடுத்து பாஸ் பெற்றுக்கொண்டும், சிலர் போலி பாஸ் தயாரித்து அதன்மூலம் ஊற்றி சுற்றி வருவதாக புகார் எழுந்ததது.

இதையடுத்து சாலைதடைகளை அதிகப்படுத்திய காவல்துறையினர் பலரை மடக்கி விசாரணை நடத்தியபோது போலி பாஸ் விவகாரம் அம்பலமானது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு நகர  போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ், நகரம் முழுவதும் வசிப்பவர்கள் பலரும் ஊரடங்கு விதிகளை மீறுவதாகவும், மகிழ்ச்சியான நகரங்களில் சுற்றி வருகின்றனர். இதை கவனித்து வருவதால், மாநகரத்தில்  அதிக சாலைத் தடைகளை ஏற்படுத்தத் தொடங்கினர்.

பலரை மடக்கி விசாரணை நடத்தியதில், அவர்கள் அத்தியாவசிய சேவை நபர்கள் என்று பொய் கூறி வாகன பாஸ் பெற்றது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

ஊரடங்கை மீறிய குற்றத்திற்காக ஏற்கனவே 21,000 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். சில ஆடிஸ் மற்றும் பென்ஸ் கார்களும்  பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறியவர், முதல் சில நாட்களில் மக்கள் அத்தியாவசிய சேவை நபர்கள் என்று கூறி பலர் பாஸ் வாங்கிச்சென்றனர். அவர்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராயவில்லை. ஆனால், பலர் பாஸை காட்டிவிட்டு ஜாலியாக ஊர்சுற்றி வருவதை பார்த்த பின்புதான் உஷாராகி, அவர்களை மடக்கி விசாரணை நடத்தினோம். இதில் பலர் பொய் சொல்லி பாஸ் வாங்கியது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து,  பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெங்களூரு காவல்துறையினர் உள்துறை சாலைகள் மற்றும் பைலைன்களில் சாலைத் தடைகளை அமைத்து வருகின்றனர். எச்.எஸ்.ஆர் லேஅவுட், பெல்லந்தூர், ஒயிட்ஃபைட், பனஸ்வாடி, கல்யாண் நகர், இந்திராநகர் மற்றும் கோரமங்களா உள்ளிட்ட பல பகுதிகள் அந்த பகுதிகளில் பல சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சாலைத் தடைகளை அதிகரிக்கப்பட்டு உள்ளன.. ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களை தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

“நாங்கள் பிரதான சாலையின் ஒரு பக்கத்தை மூடிவிட்டோம், தேவையற்ற வாகன ஓட்டத்தை தவிர்ப்பதற்காக வாகனங்கள் ஒரு பக்கத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கிறோம் என்று கூறியவர், நகரத்தின் பல்வேறு சோதனைச் சாவடிகளில், போலி பாஸின் வண்ண புகைப்பட நகல்களை பலர் பெற்றது தெரிய வந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.