பெங்களூரில் 46 பேர் பன்றி காய்ச்சலால் பாதிப்பு – பீதியில் மக்கள்

--

கர்நாடக மாநிலம், பெங்களூரில் ஒரே வாரத்தில் 46 பேருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

swin

‘எச்1என்1 – இன்ஃப்ளுயன்சா வைரஸ்’ கிருமிகளால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூக்கில் நீர்வடிதல், உடல்வலி, சோர்வு உள்ளிட்டவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

இந்நிலையில், பெங்களூரில் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 வரையான ஒரு வாரக்காலத்தில் மட்டும் 46 பேருக்குப் பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மகாதேவபுரத்தில் அதிகம்பேர் பன்றிக்காய்ச்சல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் 150 பேருக்கு டாமி புளூ மாத்திரைகள் வழங்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொசு, புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை அழிக்கும் பணிகள் நடந்து வருவதாகப் பெங்களூர் சுகாதார அதிகாரி சீனிவாசா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவர் சுனந்தா கூறுகையில், ” சமீபத்தில் கேரளா மற்றும் ஷிவமோகா ஆகிய இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. தற்போது பன்றிகாய்ச்சல் பாதிப்புக்கு ஆளான சிலர் நிவாரண உதவி உள்ளிட்ட பணிகளுக்காக அந்த இடங்களுக்கு சென்றுள்ளனர். எனவே அங்கிருந்த ‘எச்1என்1 – இன்ஃப்ளுயன்சா வைரஸ்’ மூலம் அவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் “ என்று கூறினார்