195 ‍ரன்களை கொல்கத்தாவிற்கு இலக்காக நிர்ணயித்த பெங்களூரு அணி!

ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 194 ரன்களை குவித்தது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில், துவக்க வீரர் ஆரோன் பின்ச் 37 பந்துகளில் 47 ரன்களை அடித்தார்.

தேவ்தத் படிக்கல் 23 பந்துகளில் 32 ரன்களையும், கேப்டன் விராத் கோலி 28 பந்துகளில் 33 ரன்களையும் அடிக்க, ஆட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்ட டி வில்லியர்ஸ் 33 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 73 ரன்களை விளாசினார்.

இதனால், அந்த அணி, 20 ஓவர்களின் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களை குவித்தது.

கொல்கத்தா அணியின் சார்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 4 ஓவர்களை வீசி, அதிகபட்சமாக 51 ரன்களை வாரி வழங்கினார்.

கடின இலக்கை நோக்கி, தற்போது கொல்கத்தா அணி ஆடி வருகிறது.