பெங்களூரு:

ர்நாடக மாநில முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், இன்னாள் பாஜக தலைவருமான பாபுராவ்  சின்சாசூர் மீது பணமோசடி புகார் கூறிய இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாபுராவ் சின்சாசூர் பாஜகவில் இணைந்தபோது… 

பெங்களூரைச் சேர்ந்த முப்பத்தைந்து வயது பெண் ஒருவர் அங்குள்ள சந்திர லேஅவுட்டில் உள்ள தனது வீட்டில் இறந்துமு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பிணத்தை மீட்டு உடற்கூறு பரிசோத னைக்கு அனுப்பிய நிலையில்,  இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், இறந்து கிடந்த பெண் பெயர்  அஞ்சனா ஏ சாந்தவீர் என அடையாளம் காணப்பட்டு உள்ள தாகவும்,  அந்தப் பெண், சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், தற்போதைய பாஜக தலைவருமான பாபுராவ் சின்சாசூர் மீது புகார் அளித்திருந்ததும் தெரிய வ்ந்துள்ளது.

இதுகுறித்து கூறிய காவல்துறை அதிகாரி,  விசாரணையில், அஞ்சனாவின் மகன், தனது பாட்டி வீட்டில் இருந்து ஆர்.ஆர்.நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருவதாகவும், அவரிடம்,  அஞ்சனா  தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சம்பவத்தன்று இரவு  10.30 மணியளவில் பேசியதாகவும், அப்போது நிதி நெருக்கடி யைக் காரணம் காட்டி தனது முடிவைப் பற்றி அவரிடம் பேசியதாகவும், உடனே அந்த சிறுவன் தனது பாட்டியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்து வந்து, உடனே தாய் அஞ்சனாவை மீட்டு  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும், அஞ்சனா இறந்து கிடந்த அறையில்  கன்னடத்தில் எழுதப்பட்ட ஒரு குறிப்பு கிடைத்ததாகவும், அதில் அஞ்சனா தனது மகன் மற்றும் பெற்றோரிடம் தனது சாவுக்கு  மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் கூறிய காவல்துறையினர், இறந்த அஞ்சனா ஹுப்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

அஞ்சனா மீது ஏற்கனவே பல வங்கிகள் மோசடி  வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும்,  அவர் வங்கிக் கடனைப் பெறுவதற்காக ஒரே சொத்தை பல வங்கிகளுக்கு அடகு வைத்திருந்ததாகவும் புகார் உள்ளதாக கூறப்படுகிறது.

அஞ்சனா ஏற்கனவே கர்நாடக தற்போதைய பாஜக தலைவர் பாபுராவ் சின்சாசூர், ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியின்போது அமைச்சராக இருந்தார். அவர் மீது  2015 ஆம் ஆண்டில் ரூ .11 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அதைத்தொடர்ந்து, சின்சாசூர் தன்னை  அச்சுறுத்திய தாகவும், அவர் மீது காசோலை பவுன்ஸ் வழக்கையும் தாக்கல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த இளம்பெண் மரம்மான முறையில் மரணம் அடைந்துள்ள பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்சாசூர் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதுபோல, சின்சாசூர் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, அவருக்கு எதிராக பணமோசடி விவகாரத்தில்  பாஜக சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில்தான் சின்சாசூர் கடந்த ஆண்டு (2018) ஆகஸ்டு மாதம் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஞ்சனாவின் மரணத்தை,  இயற்கைக்கு மாறான மரணம் என காவல்துறையினர்  வழக்கை பதிவு செய்துள்ளனர், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.