ரூ. 1,500 கோடியுடன் துபாய்க்கு தப்பியோடிய பெங்களூரு தனியார் வங்கி உரிமையாளர் : 23 ஆயிரம் பேர் புகார்

பெங்களூரு:

ரூ.1,500 கோடியுடன் தனியார் வங்கி நிறுவனர் துபாய்க்கு தப்பியோடிவிட்டதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர்.


ஐ மானிட்டரி அட்வைசரி என்ற பெயரில் இஸ்லாம் வங்கியாளர் முகமது மன்சூர் கான் வங்கி நடத்தி வந்தார். இந்த வங்கியில் ஏராளமானோர் கணக்கு வைத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி முகமது மன்சூர் கானுக்கு எதிராக முதல் புகார் பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் தரப்பட்டது.

இவரிடம் முஸ்லிம்கள் பெருமளவு முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ஐஎம்ஐ உரிமையாளரான முகமது மன்சூர் கான் கடந்த சனிக்கிழமையன்று துபாய்க்கு தப்பியோடி விட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இதுவரை 23 ஆயிரம் புகார்கள் குவிந்துள்ளன. முகமது மன்சூர் கான் ரூ. 1,500 கோடி வரை மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்தனர்.

முதல் புகார்தாரரான கலீத் அகமது என்பவர் மன்சூரி நெருங்கிய நண்பரும், தொழில் பங்குதாரரும் ஆவார்.
இவரிடம் மன்சூர் ரூ.4.8 கோடி மோசடி செய்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தப்பியோடிய மன்சூர் வாட்ஸ் அப் மூலம் வீடியோவை பகிர்ந்தபிறகு புகார்தாரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால், அதேசமயம் மன்சூர் துபாய்க்கு தப்பியிருக்கிறார். இந்நிலையில், மன்சூரின் வீட்டிலிருந்து விலை உயர்ந்த கார்களை போலீஸார் கைப்பற்றினர்.

மேலும், மன்சூரின் வங்கியில் பணியாற்றிய 7 இயக்குனர்களையும் பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published.