ஐந்தாவது முறையாக வென்றார் பென்ஜமின் நேதன்யகு..!

ஜெருசலேம்: இஸ்ரேலிய பிரதமர் பதவிக்கான தேர்தலில், 5வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார் அந்நாட்டின் தற்போதைய பிரதமராக இருக்கும் பென்ஜமின் நேதன்யகு.

இஸ்ரேலிய தேர்தலில் பதிவான வாக்குகளில் 96% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், நெதன்யகுவின் வலதுசாரி லிகுட் கட்சி, 37 இடங்களை வென்றுள்ளது. அவரின் அரசியல் எதிரியான முன்னாள் ராணுவத் தளபதி பென்னி கன்ட்ஸ் கட்சி 36 இடங்களைப் பெற்றுள்ளது.

மொத்தம் 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க போதுமான இடங்களைப் பெறவில்லை என்றாலும், பென்ஜமின் நேதன்யகுவின் நிலை வலுவாக உள்ளது.

வேறுசில வலதுசாரி குழுக்களுடன் இணைந்து, அவர் விரைவில் ஆட்சியமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இஸ்ரேலின் ராணுவ ஆதிக்கம் தொடருவது சம்பந்தமான இவரின் வாக்குறுதியினாலேயே, இந்த வெற்றி கிடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.