ஜெர்மனியின் மெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போடப்பட்டிருந்த சந்தையினுள் கட்டுப்பாடின்றி புகுந்த லாரி 12 பேரை பலிவாங்கியது.

பெர்லினின் கைசர் சர்ச் பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த கிறிஸ்துமஸ் மார்க்கெட்டினுள் சுமார் 60 கி.மீ வேகத்தில் திடீரென புகுந்த லாரி ஒன்று 12 பேரை பலி கொண்டது. இதில் மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் லாவகமாக தப்பி ஓடிவிட்டான்.
விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. காயமடைந்த மக்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கபபட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இது தீவிரவாத தாக்குதலாக இருக்ககூடும் என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளது. போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடிவருகின்றனர். அவன் பிடிபட்டால் பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
 
Berlin Christmas market lorry crash a probable terror attack