மாஸ்கோ

லகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண ஜெர்மன் பத்திரிகையாளருக்கு தடை விதித்த ரஷ்யாவுக்கு பெர்லின் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் தொடங்க உள்ளது.  அதைக் காண உலகெங்கும் உள்ள பல நாடுகளிலிருந்தும் மக்கள் ரஷ்யாவுக்கு வர விசா கோரி விண்ணப்பித்துள்ளனர்.   இந்த போட்டி குறித்து எழுதுவதற்காக ரஷ்யா செல்ல விரும்பிய ஜெர்மன் பத்திரிகையாளர் ஜாஜோ செப்பெய்ன் விண்ணப்பித்திருந்தார்.

அவருக்கு விசா அளிக்க ரஷ்யா மறுத்துள்ளது.    அவர் ரஷ்யா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து ஜெர்மன் அரசாங்க செய்தி தொடர்பாளர், “ரஷ்ய அரசு எங்கள் பத்திரிகையாளருக்கு விசா வழங்காமல் தடை விதித்தது மிகவும் தவறானது.  அந்த முடிவை மாற்றிக்கொண்டு அவருக்கு விசா வழங்கி உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண அனுமதிக்க வேண்டும்” என கூறி உள்ளது.

ரஷ்யாவின் இந்த முடிவுக்கு பெர்லின் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.   ரஷ்யாவின் இந்த முடிவு தவறானது எனவும் தனது முடிவை ரஷ்யா மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும் அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.