பாரிஸ் தேவாலய சீரமைப்புக்கு 20 கோடியூரோ நன்கொடை அளித்த பெர்னார்ட் அர்னால்ட்

பாரிஸ்

பிரான்ஸ் நாட்டின் மிக பெரிய செல்வந்தரான பெர்னார்ட் அர்னால்ட் நேற்று திப்பிடித்து எரிந்த நோட்ரே டாம் தேவாலயத்தை சீரமைக்க 20 கோடி யூரோ நன்கொக்டை அளித்துள்ளார்.

பெர்னார்ட் அர்னால்ட்

பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே டேம் தேவாலயத்தில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் இந்த தேவாலயத்தின் மேற் கூரை மற்றும் பிரதான கோபுரம் ஆகியவை இடிந்து விழுந்தது. சுமார் 850 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தேவாலயம் ஈஸ்டர் விரத காலத்தில் தீப்பிடித்தது கிறித்துவ மக்களிடையே கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.

ஹென்றி – சல்மா

தீவிபத்தினால் கடுமையாக சேதமடைந்த இந்த தேவாலயத்தை சீரமைக்கும் பணிகளுக்காக உலகில் உள்ள செல்வந்தர்கள் நிதி உதவியை தாராளமாக அளித்து வருகின்றனர். அதிக பட்சமாக பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹேய்க் கின் கணவர் பிரான்சிஸ் ஹென்றி பினால்ட் 10 கோடி யூரோ அளித்திருந்தார். இது இந்திய மதிப்பில் ரூ. 786.73 கோடி ஆகும்.

தற்போது பிரான்சின் மிகப் பெரிய செல்வந்தரும் உலகப் புகழ் தொழிலதிபருமான பெர்னார்ட் அர்னால்ட் தனது நன்கொடையின் மூலம் மிகப் பெரிய சாதனை செய்துள்ளார். அவர் சல்மாவின் கணவர் ஜென்றி பிரான்சிஸை போல் இரு மடங்கு நன்கொடை அளித்துள்ளார். அதாவது 20 கோடி யூரோ அளித்துள்ளார். அது இந்திய மதிப்பில் ரூ.1575.46 கோடிகள் ஆகும்.