இந்தியாவுக்கு ஆயுத விற்பனை செய்யும் டிரம்ப சாடும் பெர்னி சாண்டர்ஸ்

வாஷிங்டன்

ந்தியாவுக்கு ஆயுத விற்பனை செய்வதற்கா அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ஜனாதிபதி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது குடும்பத்துடன் வந்து சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் க்கு இந்தியாவில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.  இதற்காக குஜராத் அரசு சார்பில் ரூ.100 கோடி செலவு செய்துள்ளது.   டிரம்ப் வருகைக்கு இத்தனை ஆடம்பர செலவுகள் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.   டிரம்ப்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது.

அமெரிக்க அதிபர் தனது இந்தியா வருகையின்போது எவ்வித பொருளாதார ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என அரசு தெரிவித்திருந்தது.    இரு நாட்டுத் தலைவர்கள் அரசாங்க ரீதியான பேச்சு வார்த்தையில் மட்டும் ஈடுபடுவார்கள் என கூறபட்டது.  கடந்த ஆண்டு  அமெரிக்கா இந்தியாவை விருப்பமான வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கி வளர்ந்த நாடு என அறிவித்தது.

இது குறித்து எவ்வித கலந்துரையாடலும் நடந்ததாகத் தெரியவில்லை.  அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் செல்லும் நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தஙள் செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  அந்த வகையில் தற்போது இந்தியா வருகையின் போதும் பாதுகாப்பு உபகரணங்கள் விற்க ஒப்பந்தம் இட்டுள்ளார்.

இதற்கு அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் ஜனாதிபதி வேட்பாளருமான பென்னி சாண்டர்ஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இந்தியாவுக்கு வந்த டிரம்ப் பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து ஒப்பந்தங்கள் ஏதும் செய்யாமல் ஆயுத விற்பனை ஒப்பந்தம் செய்திருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.