டில்லி வன்முறை குறித்து டிரம்ப் ஏன் பேசவில்லை? : அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கேள்வி

வாஷிங்டன்

டில்லி வன்முறை குறித்து டிரம்ப் ஏதும் கூறாதது குறித்து அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள ஷாகின்பாக் பகுதியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து 75 நாட்களாக நடந்து வருகிறது.   கடந்த சில நாட்களாக டில்லி நகரெங்கும் அந்த போராட்டம் பரவியது.  டில்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த போராட்டத்தில் சட்ட எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் கடும் வன்முறை வெடித்தது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வந்த நேரத்தில் வெடித்த இந்த வன்முறையில் ஒரு தலைமைக் காவலர் உள்ளிட்ட 25 பேர் மரணம் அடிந்துள்ளனர்.  இந்த வன்முறை சம்பவம் உலக நாடுகள் அனைத்துக்கும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.   அமெரிக்க அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்புக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட உள்ள பெர்னி சாண்டர்ஸ், ”டில்லியில் நிகழ்ந்துள்ள வன்முறை சம்பஅகள் குறித்து டிரம்ப் ஏதும் பேசாமல் இருப்பது ஏன்?  இது அவருடைய தலைமைப் பண்புக்கான தோல்வியை காட்டுகிறது.  இது குறித்து டிரம்ப் வன்முறை சம்பவம் குறித்து தமக்கு தெரிந்த போதிலும் மோடியுடன் பேசவில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 20 கோடிக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இந்தியாவை தாயகமாக கொண்டவர்கல் ஆவார்கள்.   தற்போது பெரிதும் பரவி வரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக்கு பலர் பலி ஆகி உள்ளனர்.  இது மனித உரிமை மற்றும் டிரம்ப்பின் தலைமை பண்புக்கு தோல்வி ஆகும்.” என தெரிவித்துள்ளார்.