தோல்வி பயத்தால் ரகசியத்தை வெளியிட்ட மோடி; நாட்டுக்கு துரோகம்: ப.சிதம்பரம் காட்டம்

சென்னை:

தோல்வி பயம் காரணமாக ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ரகசியத்தை  மோடி வெளியிட்டுள்ளார், இது துரோகம் என்று ப.சிதம்பரம் காட்டமாக டிவிட் போட்டுள்ளார்.

மிஷன் சக்தி என்ற பெயரில்,  புவி சுற்றுவட்டப் பாதையில் 300 கி.மீ தொலைவில் சுற்றிய செயற்கைக்கோள் ஒன்றை,  தனது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை மூலமாக (ASAT) மூன்று நிமிடங்களில் சுட்டு வீழ்த்தி சாதனை படைத்துள்ளது இந்திய விண்வெளித்துறை. இதை பாஜக அரசு தங்களது வெற்றியாக அறிவித்து வருகிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் தெரிவித்து வரும் நிலையில், மோடியின் செயல் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடி உள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம்  தனது விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,  விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது.

புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தை காப்பாற்றினார்கள். பாஜக அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம்

தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தோல்வி பயமே  என்று கேள்விகளை எழுப்பி உள்ளார் சிதம்பரம்.

Leave a Reply

Your email address will not be published.