சிறந்த நடத்தை சான்று ; யாரை சொல்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்…..?

வனிதா விஜயகுமாருக்கும், இயக்குநர் பீட்டர் பாலுக்கும் நடந்த திருமணம் கேலிக்குள்ளாகியுள்ளது.பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் வனிதாவின் திருமணம் பற்றி ஆளாளுக்கு விமர்சிக்கிறார்கள்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் வனிதா விஜயகுமார், பீட்டர் பால் திருமணம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அந்த ட்வீட்டுகளை பார்த்த வனிதா இது ஒன்றும் உங்கள் ஷோ இல்லை, உங்கள் அக்கறையை உங்களுடன் வைத்துக் கொள்ளும், என் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் என்று பதில் அளித்தார்.

இந்நிலையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் வனிதா விஜயகுமார், பீட்டர் பால் திருமணம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அந்த ட்வீட்டுகளை பார்த்த வனிதா இது ஒன்றும் உங்கள் ஷோ இல்லை, உங்கள் அக்கறையை உங்களுடன் வைத்துக் கொள்ளும், என் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள எனக்கு தெரியும் என்று பதில் அளித்தார்.

மத சகிப்புத்தன்மை இல்லாதவர்கள், குழந்தைகளை கொடுமைப்படுத்துவர்களை பாதுகாக்க முயற்சி செய்வோர், காசோலைகள், உயில்களில் போலி கையெழுத்து போடுவாோர் அவர்களுடன் கைகோர்த்துள்ளனர். இது தான் சிறந்த நடத்தை சான்று என்று கூறி சிரிக்கும் ஸ்மைலிகளை போட்டுள்ளார்.

https://twitter.com/LakshmyRamki/status/1278184670220304384

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ட்வீட்டுகளை பார்த்த அவரின் ரசிகர்கள் நீங்கள் பெயர் சொல்லாவிட்டாலும் வனிதா விஜயகுமார் என்று புரிகிறது மேடம். நீங்கள் ஏன் அவருக்கு போய் அறிவுரை வழங்கி உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என கூறி வருகின்றனர் .