சென்னை: நடிகை குஷ்பு இன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர உள்ள நிலையில், அவரது நடவடிக்கையை பெஸ்ட் ஜிம்னாஸ்டிக் பல்டி என்று காமெடி நடிகர் எஸ்.பி.சேகர் கிண்டலடித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருக்கும் குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளார். முன்னதாக டெல்லி சென்ற குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியாகாந்திக்கு கடிதம் எழுதினார். அதையடுத்து, இன்று மதியம் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில்   அக்கட்சியில்  இணைகிறார்.
கடந்தவாரம் வரை பாஜகவை கடுமையாக விமர்சித்தவர் குஷ்பு, திடீரென பாஜகவில் இணைவது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவில் இணைவரை  மாற்றம்-தவிர்க்க முடியாதது என்பதை காவி உரையுடன் டிவிட் பதிவிட்ட குஷ்பு திடீரென டெல்லி பறந்தார்.
இதுதொடர்பாக டிவிட் பதிவிட்டுள்ள  நடிகர்  எஸ்.வி.சேகர், சனிக்கிழமை ஒண்ணு சொல்லிட்டு அதையே ஞாயிற்றுக்கிழமை மொத்தமா மாத்தி பேச ரொம்ப திறமை வேணும் நாட்டாமை . Best gymnastic பல்டி. என கிண்டலடித்துள்ளார்.