ஜாக்கிரதை: : குவைத்தில் நர்ஸ் வேலை.. மோசடி!

குவைத் நாட்டிற்கு நர்ஸ் (தாதியர்) வேலைக்கு ஆள் எடுப்பதாக யாரேனும் சுவரொட்டிகள் மூலமாகவோ, முகநூல் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள், வாட்சப் அலைப்பேசி குறுஞ்செய்தி மூலமாகவோ விளம்பரம் செய்தால், உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும், குடிபெயர்வோரின் பாதுகாவலர் அலுவலகத்திற்கும், மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்திற்கும், சம்பந்தப்பட்ட விளம்பர தகவல்களை ஆதாரங்களுடன் புகார் செய்யவும்.

download

வெளிநாட்டு வேலை வாங்கித் தரும் முகவர் மத்திய அரசிடமிருந்து பதிவு சான்று பெறாமல் அத்தொழிலை செய்யக்கூடாது. அவ்வாறு வெளிநாட்டு வேலை வாங்கி கொடுப்பதற்கு ரூபாய் இருபதாயிரத்துற்கும் மேல் சேவைக் கட்டணம் வசூலிக்ககூடாது.

ஆனால் குவைத் நாட்டிற்கு நர்ஸ் (தாதியர்) வேலைக்கு முகவர்கள் ரூபாய் இருபத்தைந்து லட்சம் வரைக்கும் வசூல் செய்து மோசடி செய்து வந்த சட்டவிரோத செயல், பெரியளவில் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. பலவித மோசடிகளிலும் இந்த போலி நிறவவனங்கள் ஈடுபட்டன.  ஆகவே தனியார் நிறுவனங்கள் குவைத்தில் நர்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதை இந்திய அரசு தடுத்திருக்கிறது.

இந்திய அரசே முன் வந்து இ – மைக்ரேட் சிஸ்டம் ( E – Migrate System ) வாயிலாக கீழ் காணும் அரசு நிறுவனங்கள் வாயிலாக குவைத்தில் நர்சு வேலைக்கு ஆள் சேர்கின்றனர்.

கேரளா – நாற்கா ரூட்ஸ் மற்றும் ஓவர்சீஸ் டெவலோப்மென்ட் அன்ட் எம்ப்பிளாய்மென்ட் பிரமோஷன் கன்சல்டன்ட்ஸ்.

சென்னை – ஓவர்சீஸ் மேன்பவர் கார்பரேசன் லிமிடெட்

உத்தர் பிரதேஷ் பினான்சியல் கார்பரேசன்

தெலுங்கானா ஓவர்சீஸ் மேன்பவர் கம்பனி

இ – மைக்ரேட் சிஸ்டம் ( E – Migrate System ) இணையதள முகவரி https://emigrate.gov.in/ext/

தற்பொழுது கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் சில மோசடி பேர்வழிகள் குவைத் ஆயில் கம்பனியில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்வதாகவும், பல லட்சம் ருபாய் பணத்தை வசூலித்து மோசடி செய்யும் கெட்ட எண்ணத்தில் செயல்பட்டு வருவதாக ஊடகம் வாயிலாக இந்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது. அதன் விபரங்களை http://kuwaitnris.com/news.php?news=11891&category=c350 என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம். இத்தகைய விளம்பரங்களை யாரும் பிறருக்கு அனுப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

கார்ட்டூன் கேலரி