ரஜினி – கமல் –
பாக்யராஜ்

“தேர்தலில் நேரத்தில் மட்டும் வந்து போட்டியிடும் தேர்தல் மன்னர்களுக்கு உரிமை இருக்கும்போதும் கமல், ரஜினி தேர்தல் அரசியலுக்கு வருவதை தவறு என சொல்ல முடியாது” என்று நடிகர் பாக்யராஜ் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

நேற்று மதுரை வந்த நடிகர் பாக்யராஜ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தெரிவித்ததாவது:

“அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து, போட்டியிடும் தேர்தல் மன்னர்கள் இங்கு உண்டு. பல பத்து தேர்தல்களில் போட்டியிடுவார்கள். அதையே சாதனையாக கொள்வார்கள். ஜனநாயகத்தில் அவர்களுக்கு உரிமை இருப்பதாக  சொல்கிறோம்.

அப்படி இருக்கும்போது, ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் அரசியலுக்கு வருவதை தவறு என்று சொல்லமுடியாது. அவர்களுக்கும் உரிமை உண்டு” என்றார்.

மேலும், “ரஜினி, கமல் ஆகியோர்  அரசியலுக்கு வருவதற்கு உரிமை உண்டு என்றாலும் தொடர்ந்து நீடிப்பது மக்கள் கையில் உள்ளது” என்றார்.

இன்னும் மூன்று வருடங்களில் சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், ரஜினி,  அரசியல் குறித்து எதுவும் பேசப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். கட்சியின் பெயர்,  கொடி எதுவும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை.

கமல் ட்விட்டுகளில் மட்டும் கருத்து தெரிவித்துவருகிறார்.

இதைவைத்துத்தான் இருவரையும் கிண்டலடித்து பாக்யராஜ் பேசியிருப்பதாக கருதப்படுகிறது.