திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பாக்யராஜ்!

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து கே.பாக்யராஜ் விலகினார்.

தமிழ்த்திரைப்பட எழுத்தாளர்களுக்காக இயங்கி வருவது , திரைப்பட எழுத்தாளர் சங்கம். இந்த சங்கத்தில் 523 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். கடந்த  மார்ச் மாதம் நடந்த தேர்தலில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் சற்று முன் தனது தலைவர் பதவியை கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் சர்கார் படத்தின் கதை குறிித்த சர்ச்சை ஏற்பட்டது. வருண் ராஜேந்திரன் என்பவர், தனது கதையை சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் திருடிவிட்டதாக புகார் அளி்த்தார். இதில் வருண் ராஜேந்திரன் கூறுவதே சரி என பாக்யராஜ் தெரிவிித்தார்.

பிறகு இந்த பிரச்சினை நீதிமன்றத்துக்குச் சென்றது. அடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியே பேசித்தீர்த்துவிட்டதாக ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்தார். இதில் பாக்யராஜ் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த நிலையில் அவர்  ராஜினாமா செய்துள்ளது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது  ராஜினாமா முடிவு குறித்து பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சர்க்கார் பட கதை விவகாரத்தில் நான் நியாயமாக நடந்துகொண்டேன். அதனால் எனக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டன. நான் தேர்தலில் போட்டியிடாமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம்.  என்னைப்போலவே நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ராஜினாமா செய்வது நல்லது. பிறகு தேர்தல் நடக்கும்போது நான் போட்டியிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள பாக்யராஜ், “சர்கார் பட விவகாரத்தில் நான் எவ்வளவோ கெஞ்சியும் இயக்குனர் முருகதாஸ் உடன்படவில்லை.   இதன் காரணமாகவே சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பாளரின் படத்தின் கதையை பற்றி வெளியே சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் அது தவறுதான். அதற்காக சர்கார் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்சிடம் மன்னிப்பு கோருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.