Random image

‘பாரத் பந்த்’ மகத்தான வெற்றி: திருநாவுக்கரசர்

சென்னை:

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து  நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்தில் ஒருசில கட்சிகளை தவிர பெரும்பாலான கட்சிகள் பங்கேற்று மத்தியஅரசுக்கு எதிராக குரல் கொடுத்தன.

இந்த முழு அடைப்பு போராட்டம் வெற்றிபெற்றதாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் அறிவித்து உள்ளன. ஆனால், பாரத் பந்த் தோல்வி அடைந்ததாக பாஜகவும் கூறி வருகிறது.

இந்த நிலையில்,  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று ற நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்திய முழு அடைப்பு போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார்.

மேலும்,  தமிழகத்தில் அதிமுக தவிர்த்து முழு அடைப்பில் பங்கேற்ற மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துக் கட்சிகள், வணிகர் அமைப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும்  கூறினார்