Random image

உலக அளவில் முதலிடம் பிடித்து டிரெண்டிங்கான ‘பாரத் பந்த்’

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, மோடி அரசுக்கு எதிரான காங்கிரஸ் அறிவித்த பாரத் பந்த் இன்று உலக அளவில் டிரெண்டிங்காகி உள்ளது.

பெட்ரோல், டீசல் உயர்வு வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. விரைவில் ரூ.100ஐ எட்டும் வகையில் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இன்று பொது வேலைநிறுத்தம் நடைபெற்ற வருகிறது.

அகில இந்திய காங்கிரஸ் அறிவித்த இந்த பொது வேலை நிறுத்தம் (பாரத் பந்த்) போராட்டத்துக்கு 21 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. மேலும், மோட்டார் வாகன உரிமையாளர்கள், ஆட்டோ, டாக்சி சங்கங்கள், வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும்  ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சமூக வலைதளமான டிவிட்டரில் இன்று இந்தியாவில் நடைபெற்று வரும் பாரத் பந்த் உலக அளவில் முதலிடத்தை பிடித்து டிரெண்டிங்காகி உள்ளது. இது ஆளும் மோடி அரசுக்கு பின்னடைவாக கருதப் படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலோர் இந்தியாவில் நடைபெறும் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருவது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.