தராபாத்

பாரத் பயோடெக் நிறுவனம் தனது கொரோனா தடுப்பு மருந்தின் முதல் விநியோகத்தை டில்லிக்கு அனுப்பி உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசிகள் போடும் பணிகள் ஏற்கனவே பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன.  வரும் 16 ஆம், தேதி முதல் இந்தியாவிலும் இந்த பணிகள் தொடங்க உள்ளன.

இதையொட்டி இந்திய அரசு புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களில்; இருந்து தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆர்டர் அளித்துள்ளது. 

நேற்று அதிகாலை புனேவில் இருந்து சீரம் இன்ஸ்டிடியூட் முதல் விநியோகத்தை அனுப்பி வைத்தது.  இந்த கோவிஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பலகலை மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவன  கூட்டுத் தயாரிப்பாகும்,

இன்று ஐதராபாத்தில் இருந்து பாரத் பயோடெக் நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் விநியோகத்தை ஏர் இந்தியா விமானம் மூலம் தொடங்கி உள்ளது.   இந்த மருந்துக்கு கோவாக்சின் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஆகும்.