சல்மான் கானின் ‘பாரத்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…..!

 

அலி அப்பாஸ் ஜாஃபர்.இயக்கத்தில் ‘ஆன் ஓட் டு மை ஃபாதர்’ (‘An Ode To My Father’) என்கிற கொரிய படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கும் படம் ‘பாரத்’ . இந்த படத்தின் முதல் போஸ்டரை இன்று தனது சமூக வலைதளப் பக்கங்களில் சல்மான் கான் பகிர்ந்துள்ளார்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சற்று வயதான தோற்றத்தில் பாரத் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சல்மான். இந்தப் போஸ்டரைப் பகிர்ந்ததோடு, “எனது தாடியும், தலைமுடியும் மட்டுமே கருப்பு வெள்ளை. ஆனால் எனது வாழ்க்கை வண்ணமயமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 5 அன்று வெளியாகவுள்ள இந்த படத்தில் கேத்ரீனா கைஃப், தபு, திஷா படானி உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கின்றனர்.

கார்ட்டூன் கேலரி