டிராக்டர் ஓட்டியவர்கள் வழி மாறி செங்கோட்டை சென்று விட்டனர்- விவசாய சங்கம்

புதுடெல்லி:

டிராக்டர் ஓட்டியவர்கள் வழி மாறி செங்கோட்டை சென்று விட்டனர் என்று விவசாய சங்கத்தை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி நுழைவு வாயிலில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க குடியரசுத் தினவிழா டிராக்டர் பேரணி நடத்தினர்.
இந்த பேரணியின் போது யாரோ சில விஷமிகளின் சதியால் பேரணியில் வன்முறையை தூண்டும் வகையில் சில காரியங்களை செய்ததால் போலீஸார் விவசாயிகளின் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தடியடி நடத்தினர்.

டிராக்டர் ஓட்டியவர்கள் வழி மாறி செங்கோட்டை சென்று விட்டனர் என்று பாரத் கிஷான் சங்க தலைவர் ராகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,டிராக்டரை ஓட்டிச் சென்றவர்கள் படிப்பறிவில்லாத பாமர மக்கள். அவர்களுக்கு டெல்லிக்கு எப்படி போக வேண்டும் என்பது கூட தெரியாது என்று தெரிவித்துள்ளார்.