கோயம்புத்தூர்

காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்த்து பாரத் சேனாவை சேர்ந்தவர்கள் கோவை ஆட்சியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

வரும் பிப்ரவர் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப் படுகிறது.   அதையொட்டி ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் ஒரு தினம் என கொண்டாட்டம் நடைபெறுகிறது.    ஒரு நாள் பூ,  ஒரு நாள் டெடி பியர் என பரிசுகள் தினமாக உள்ளது.   காதலர் தினம் அன்று கடற்கரை,  திரையரங்குகள், மற்றும் பூங்காக்களில் காதலர்கள் ஜோடி ஜோடியாக சென்று வருவது வழக்கமாக உள்ளது.

அதே நேரத்தில் இந்து அமைப்பினர் இந்த கொண்டாட்டங்களை எதிர்த்து வருகின்றனர்.   அவ்வகையில் இன்று கோயம்புத்தூரில் இந்து அமைப்பான பாரத் சேனா தொண்டர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.   கோவை ஆட்சியாளர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது.

பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் என சொல்லிக் கொண்டு பொது இடங்களில் அநாகரீகமாக நடப்பவர்களை கைது செய்யக் கோரியும்.   காதலர் தினத்தை தடை செய்யக் கோரியும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.   போராட்டத்தில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து எரிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.