குஜராத் மாநிலம், ஜுனாகாத் மாவட்டத்தில் உள்ள கிர் காடுகள், சிங்கங்களின் மிகப்பெரிய சரணாலயமாக உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தனி வாக்காளரான பரத்தாஸ் தர்ஷந்தாஸ் (Bharatdas Darshandas) தனது 69 வயதில் மரணத்தை தழுவினார்.

குஜராத்தில் உள்ள கிரி வனவிலங்கு சரணாலயம் உலகப் புகழ் பெற்றது. 1412 சதுர கி.மீ பரப்பளவை கொண்ட இந்த சரணாலயம்  1965ம் ஆண்டு  உருவாக்கப்பட்டது.  ஆசியாவில் உள்ள சிங்கங்களை பாதுக்காப்பதற்கு ஒரு முக்கிய இடமாக அமைகிறது.

இதனை சசாங்கிர் என்றும் அழைப்பர். குஜராத்திலுள்ள தலாலாகிர் பூங்காவிற்கு அருகில் உள்ளது. கம்பீரமான சிங்கங்கள், சிறுத்தைகள், கரடிகள், நரிகள், சாம்பார் மான்கள், சின்காரா மற்றும் இந்தியாவின் ராஜநாகங்கள் உள்ளன. 38 வகையான பாலூட்டினங்கள், 300 பறவையினங்கள், 37 வகையான ஊர்வன இனங்கள், 2000 பூச்சியினங்கள் உள்ளன. ஆசியாவில் உள்ள சிங்கங்களை நேரில் பார்க்ககூடிய அனுபவத்தை இந்த பூங்காவில் அனுபவிக்கலாம்.

இந்த வனவிலங்கு பகுதியில் உள்ள சிவன் கோவிலில் பூசாரியாக இருப்பவர்  பரத்தாஸ் தர்ஷந்தாஸ். அந்த பகுதியில் வசிக்கும் ஒரே ஒரு நபரும் அவரே. இவருக்காக தேர்தல் சமயத்தில் தனி வாக்குச்சாவடி அமைக்கப்படு வதும் சிறப்பு வாய்ந்து.

வயது முதிர்வு காரணமாக, நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை ராஜ்கோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார்.  சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில், அவரது சீடர்களால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மரணத்தை எய்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம்,  மகந்த் பரத்தாஸ் அல்லது பரத்தாஸ் பாபு என்று பிரபலமாக அழைக்கப்படும் பரத்தாஸ் சிறுநீரகங்கள் தொடர்பான சிக்கல்களுடன் திங்கள்கிழமை ராஜ்கோட்டில் உள்ள கிறிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவர் இறந்துவிட்டார். அவர் நீரிழிவு நோயாளியாக இருந்தார், மேலும் அவரது சிறுநீரகங்கள் இரண்டுமே செயல் இழந்து விட்டன.  அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. . ஆனால் அவரது இதயம் படிப்படியாக செயலிழந்து, மரணத்தை தழுவியதாக தெரிவித்து உள்ளது.

இந்த தகவலை கிர் சோம்நாத்தின் கொடிநார் தாலுகாவில் உள்ள ஜமத்னி ஆசிரமத்தின் தலைவர் தெரிவித்து உள்ளார்.