சல்மான் கானுடன் ‘ராதே’ படத்தில் நடிக்கும் பரத்….!

சல்மான் கான் – பிரபுதேவா இணையும் புதிய படம் ‘ராதே’ . இந்த படம் 2020-ம் ஆண்டு பக்ரீத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் முழுக்க ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக உருவாகவுள்ளது. இதன் பெரும்பகுதி மும்பையில் படமாக்கப்படுகிறது.

தற்போது இந்த படத்தில் நடிக்க பரத் ஒப்பந்தமாகியுள்ளார் . மேலும் திஷா படானி, ரந்தீப் ஹூடா, ஜாக்கி ஷெராஃப், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டதாக நடிகர் பரத் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.