செம்பருத்தி’ சீரியல் ஒளிப்பதிவாளர் அன்புவின் மரண செய்தி அறிந்து பரதா நாயுடு கண்ணீருடன் இரங்கல்….!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி’ தொடரின் ஒளிப்பதிவாளர் அன்பு மரணமடைந்ததை அடுத்து சீரியலில் நடித்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

ஒளிப்பதிவாளர் அன்புவின் மரண செய்தி அறிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் செம்பருத்தி சீரியல் நடிகை பரதா நாயுடு.

“எனது ஒன்றரை வருட செம்பருத்தி தொடர் பயணத்தில் நிறைய அரசியலைச் சந்தித்தேன். பெரிய போர்க்களமே. அப்போது தனியாக இருந்த எனக்கு ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் தான் உத்வேகம் அளித்தார்கள்.

எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் தான் அவரிடம் பேசினேன். அவரைப் பற்றி திடீரென இப்படி ஒரு நியூஸ் நான் எதிர்பார்க்கவே இல்லை. சுற்றியிருப்பவர்கள் என்ன பேசினாலும் சாதிப்பதை மட்டுமே யோசி என்று எப்போதும் சொல்வார். உன்னை தடுக்க நினைக்கிறார்கள் என்றால் நீ ஏதோ ஒன்றை சாதித்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறுவார்.என பரதா நாயுடு தனது வீடியோவில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

You may have missed