உருவாகிறது தமிழ்த் திரையுலகில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம்……!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் ஒன்று நீண்ட காலமாக இருக்கிறது. இந்தச் சங்கத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இந்தத் தயாரிப்பாளர் சங்கத்தில், தற்போது படம் தயாரிப்பவர்கள் என்று பட்டியலிட்டால் சுமார் 200 பேர்தான் இருப்பார்கள். மீதி அனைவருமே படம் எடுத்தவர்கள்தான், ஆனால் இப்போது படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள்.

இதனால், தற்போது தொடர்ச்சியாக படம் தயாரிப்பவர்கள் நலனுக்காக புதிய சங்கமொன்றை உருவாக்கவுள்ளனர். இந்தச் சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராகவும், டி.சிவா செயலாளராகவும், சத்யஜோதி தியாகராஜன் பொருளாளராகவும் செயல்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய சங்கம் குறித்து, தயாரிப்பாளர்கள் சிலர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். விரைவில் இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்போது, காரசாரமான விவாதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி