பாரதிராஜா பிறந்த நாள் சிறப்பு கட்டுரை:
 
சினிமா என்றால் மாய உலகம் அதில் நடிப்பவர்கள் அதிசயமானவர்கள் என்ற காலகட்டம் 1977ம் ஆண்டு வரை இருந்து வந்தது. அதன்பிறகு அந்த மாயை உடைத்தெறிந்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அதென்ன 1977 என்கிறீர் களா? அந்த ஆண்டுதான் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே திரைக்கு வந்தது.
சினிமா ஸ்டுயோவுக்குள் மட்டுமே சுழன்றுக் கொண்டிருந்த சினிமா கேமரா வையும் திரை நட்சத்திரங்களையும் பரட்டையும் சப்பாணியும் இருந்த கிராமத்து வீதிகளுக்கும், பசுமை போர்த்திய வயல் வெளிக்கும் கொண்டு சென்றார்.

இப்படிக்கூட சினிமா எடுக்கலாமா என்று பிரபல இயக்கு னர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு அப்படங்கள் திரை அரங்கில் வெற்றி கொடிகட்டி பறந்தது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஏற்கனவே பிரபலங்களாக இருந்தபோதும் இப்படம் அவர்கள் இருவரையும் வேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

 
அடுத்த டுத்து பாரதிராஜா இயக்கிய சிவப்பு ரோஜாக்கள் (1978), கிழக்கே போகும் ரயில்(1978), புதிய வார்ப்புகள் (1979), நிறம் மாறாத பூக்கள் (1979), கல்லுக்குள் ஈரம் (1980), நிழல்கள் (1980), டிக் டிக் டிக் (1981), அலைகள் ஓய்வதில்லை (1981) என அவரின் அஸ்திரங்கள் தொடர்ந்தன. நடிகர் திலகம் சிவாஜி நடித்த முதல்மரியாதை படம் அவரது பாரதிராஜாவின் படங்கள் என்ற கிரீடத்தில் வைரமாக பதிக்கப்பட்டி ருக்கிறது. குறிப்பாக அலைகள் ஒய்வதில்லை படத்தில் காதலுக்கு சாதி குறுக்கிடும்போது பூணூலையும், சிலுவையும் அறுத்து சாதி வெறியர் களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து பெரும் புரட்சி தீயை படரவிட்டார்.
தேனி அருகே அல்லிநகரம் என்ற கிராமத்தில் 1941ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பிறந்த சின்னசாமி என்ற குழந்தை தான் பின்னர் பாரதிராஜாவாக சினிமாவு லகில் புயலாக நுழைந்து புதிய புரட்சியை ஏற்படுத்தியது. 79 வயது பாரதிராஜா இன்றைக்கும் ஜீன்ஸ் போட்ட இளைஞராக சினிமா எடுத்துக்கொண்டும் நடித்துக்கொண்டும் இருக்கிறார்.

அழகு இருந்தால்தான் சினிமா ஹீரோ ஆக முடியும் என்ற சினிமா இலக்கணங்களை உடைத்தவர் பாரதிராஜா, சினிமா ஸ்டுயோவுக்குள் நுழையாதே என்று அவரது கழுத்தைப்பிடித்து பிரபல ஸ்டுயோவிற்குள்ளிருந்து இழுத்து வரப்பட்டு சாலையில் தள்ளிவிடப்பட்ட அந்த தருணத்தில் நானும் ஒரு இயக்குன ராக ஆகிக்காட்டுகிறேன் என்ற சவாலைவிடுத்து பின்னர் அந்த ஸ்டுடியோ ஓனர்களே அவரை வைத்து படம் எடுத்த சம்பவமெல்லாம் பாரதிராஜா என்ற முரட்டு பிடிவாதக்காரரின் சரித்திரத்தில் கூர் மழுங்காத பக்கங்கள்.
பாரதிராஜா உதவியாளராக இருந்து பின்னர் இயக்குனர் ஆனவர்கள்தான் கே.பாக்யராஜ், மறைந்த இயக்குனர் மணிவண்ணன், சித்ராலட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை.
பாரதிராஜாவுக்கு ஆர் என்ற எழுத்து மீது ஏதோ ஈர்ப்பு. தான் அறிமுகப்படுத்திய நடிகைகளுக்கு ஆர் என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களையே சூட்டினார். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா என பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தார். அவர்கள் எல்லோருமே திரையுலகில் சாதனை நட்சத்திரங்களாக இன்றைக்கும் ஜொலித்துக்கொண்டிருகின்றனர்.

நடிகன் ஆக வேண்டும் என்று ஆசைப் பட்ட பாரதிராஜாவை பிரபல நடிகர் ஒருவர், ’உன் மூஞ்சை கண்ணாடியில் பார்த்திருக்கியா’ என்று கேட்டு அவரது ஆசைக்கு அணைபோட்டது. ஆனால் பாரதிராஜா இன்றைக்கு எஸ்.வி.ரங்காராவ் போல் ஒரு குணசித்ர நடிகராவும் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
மீண்டும் ஒரு மரியாதை(2020), நம்ம வீட்டுப் பிள்ளை (2019),கென்னடி கிளப்(2019), குரங்கு பொம்மை (2017), பாண்டிய நாடு (2013), ரெட்டச்சுழி (2010), ஆய்த எழுத்து (2004), கல்லுக்குள் ஈரம் (1980), தாவணிக் கனவுகள் (1984) ஆகிய படங் களில் நடித்தார்.
தயாரிப்பாளராகவும் அல்லி அர்ஜூனா (2002), தாஜ்மகால் (1999)கருத்தம்மா(1995) படங்களை தயாரித்திருக்கிறார் பாரதிராஜா.
பாரதிராஜாவின் வாடாபோடா நண்பர் இசைஞானி இளையராஜா. இவர்கள் இணைந்து அளித்த படங்கள் காலத்தால் அழிக்கமுடியாது. இடையில் கருத்துவேற்பாடு ஏற்பட்டு பிரிந்தாலும் இந்த மேதைகள் சமீபத்தில் சந்தித்தபோது தங்களது பழைய நட்பையும்  பாசத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

தனது சினிமாவை தொடங்கும்போதும் சரி  தனது பேச்சை தொடங்கும்போதும்சரி என் இனிய தமிழ் மக்களே என்ற சிங்கத்தின் கர்ஜனைபோல் ஒலிக்கும் அவரத் அந்த வார்த்தைக்கு அடை மழைபோல் கைதட்டல் கேட்கும். பாரதிராஜாவின் சேவை அன்றைக்கு தேவைப்பட்டதைவிட இன்றைக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகிறது.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதுடன் அவர் நீடூழி வாழ பத்திரிகை டாட் காம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
-கண்ணன்