இயலும், இசையும், இணைந்தது என் தேனியில்….! இளையராஜாவுடன் இணைந்த பாரதிராஜா நெகிழ்ச்சி

தேனி:

மிழ் சினிமாவில்  ஜாம்பாவான்களாக திகழ்ந்து வரும் இளையராஜா, பாரதிராஜா இருவருமே ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே நண்பர்களாக இருந்து வந்தவர்கள் இடையில் சில காலம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர்.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தை புகைப்படத்துடன், இயக்குனர் பாரதிராஜா மகிழ்ச்சியுடன் பதிவிட்டு உள்ளார. அதில், இயலும், இசையும், இணைந்தது என் தேனியில்…. இதயம் என் இதயத்தைத் தொட்டது… என்று பதிவிட்டு உள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் இருவரும்  ஒருவரை ஒருவர்  சந்தித்துப்பேசி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.. உயிர்த்தோழன் இளையராஜாவை சந்தித்து உணர்ச்சி வசப்பட்ட பாரதிராஜா.

தமிழ் சினிமா வரலாற்றில், புதிய வரலாற்றை உருவாக்கியவர்களின் முக்கியமானவர்கள் பாரதிராஜா, இளையராஜா. பாரதிராஜாவின்  ’16 வயதினிலே”  காலத்திலிருந்தே  இருவரின்  நட்பு உலகம் அறிந்தது. இருவரும் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.

பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள் [1986ம் ஆண்டு] இருவருக்கும் இடை யே சிறு  விரிசல் ஏற்பட, இளைய ராஜாவை விட்டு, வேறு இசையமைப்பாளர்களை தேடினார் பாரதிராஜா. பின்னர்,  இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, மீண்டும் இணைந்தனர். அதைத்தொடர்ந்து இருவரும் இடையே மனக்கசப்பு ஏற்பட பாரதிராஜா வேறு இசையமைப்பாளர்கள் மூலம் தனது படத்தை தயாரித்து வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் தங்களது சொந்த மாவட்டமான தேனிக்கு சென்ற பாரதிராஜா அங்கு இளைய ராஜாவை சந்தித்தார். இருவரும் ஒருவருக்கொருவர் நட்புடன் ஒரே காரில் அமர்ந்திருந்த புகைப்படம் வெளியானது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள பாரதிராஜா,  “எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் என் உயிர்த்தோழன் இளையராஜாவைச் சந்தித்தேன். இயலும் இசையும் இணைந்தது. இதயம் என் இதயத்தைத் தொட்டது ’என்று  நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு உள்ளார்.

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தால், அங்கிருந்த இளையராஜாவின் அலுவலகம் பிரச்சினையை எதிர்கொண்ட நிலையில், இளையராஜாவுக்காக பாரதிராஜா தோள்கொடுத்தாக கூறப்படுகிறது.

இந்த வேளையில்தான், தேனியில்,  வைகை நதிக்கரையோரம், தான் ராஜாவுடன் காரில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பாரதிராஜா மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பதிவிட்டு உள்ளார்….

இரு இமயங்களும் இணைந்தது திரையுலகினரிடையே மகிழ்ச்சியையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.‘

கார்ட்டூன் கேலரி