சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, அவரிடம் இருந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சசிகலாவை 4 ஆண்டுகளை சிறையிலும் அடைத்தது. தற்போது தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலா, தேர்தலை எதிர்கொள்ள முடியாத நிலையில், அதிமுகவுக்கு எதிராக, தனது குடும்ப கட்சிக்காக அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று சசிகலாவை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  “சாதனை தமிழச்சியை பார்க்க ஆசைப்பட்டேன்; பார்த்துவிட்டேன்” என கூறினார். பாரதிராஜாவின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. சாதிய ரீதியிலாக பாரதிராஜா, குற்றவாளியான சசிகலாவை, சாதனை தமிழச்சி  என கூறுகிறாரோ என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள சசிகலா ஜெ. திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.அதைத்தொடர்ந்து சசிகலாவை சரத்குமார், சீமான், பி.ஆர்.பாண்டியன், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், டிராபிக் ராமசாமி உள்பட பலர் சந்தித்து சென்றனர். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சசிகலாவை சந்தித்த பாரதிராஜா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  “ஒரு சாதனை தமிழச்சியை பார்க்க ஆசைப்பட்டேன்; பார்த்துவிட்டேன். ஒற்றை தமிழ் பெண்ணாக சோதனைகளை தாங்கி நிற்கும் பெண்மணியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வந்துள்ளார் சசிகலாஎன்று புகழாரம் சூட்டினார்.

பாரதிராஜாவின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  சாதி ரீதியிலான பாசத்தை  பாரதிராஜா காட்டியிருக்கிறோர்  என்று விமர்சக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா வின் தோழி என்ற பின்னணியில், அவரது பின்னால் ஒளிந்துகொண்டு, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் சொத்துக்களை வாரி குவித்தவர் சசிகலா என்பது அனைவரும் அறிந்த உண்மை. மன்னார்குடி மாஃபியா என்று புகழப்படும் சசிகலாமீதா சொத்துக்குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதும், அவர் முறைகேடாக சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சசிகலாவும் 4 ஆண்டுகளை சிறை தண்டனை பெற்றார். அவரது சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

தற்போது தண்டனை முடிந்து வெளியே வந்துள்ள சசிகலாவை, அவரது குடும்பத்தைச்சேர்ந்தவரான  டிடிவி தினகரன் கட்சி சார்பில்  பேனர், வரவேற்பு என  கோடிக்கணக்கான ரூபாய  செலவழிக்கபபட்டு, பிரமாண்டமாக வரவேற்பு கொடுத்ததுடன், ஊரார் சொத்தை கொள்ளையடித்த குற்றவாளியான சசிகலாவை, தியாகத்தலைவி என்ற பெயரிலும் அவரது அடிமைகள்  அழைத்து வருகின்றனர்.  இதுவே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஊழல் செய்து, சிறை தண்டனை பெற்ற ஒருவரை, தியாகத்தலைவி என்று கூறுவது தமிழகதின் சாபக்கேடு என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது, இயக்குனர் பாரதிராஜா, சசிகலாவை, வீரத்தமிழச்சி என்று விளித்து பேசியிருப்பது மேலும் கோபத்தை கிளறியுள்ளது.

சசிகலாவின் தேவர் சமூகத்தை சேர்ந்தவரான இயக்குனர் பாரதிராஜா, தனது சாதிய பாசத்தினாலேயே, சசிகலாவை வீரத்தமிழச்சி என்று புகழ்ந்துள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பிரபல இயக்குனருக்கு, இது அழகல்ல என்று சிலர் விமர்சித்துள்ளதுடன், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற நபருக்கு பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளது, அவரது திறமைக்கும், பதவிக்கும் அழகல்ல என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல், தமிழக அரசியல்வாதிகள்தான் பிதற்றி வருகிறார்கள்  என்று பார்த்தால், திரையுலகினரும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது பாரதிராஜாவின் பேச்சால் வெளிப்பட்டுள்ளது.