வெற்றிமாறன் படத்திலிருந்து விலகிய பாரதிராஜா….!

பூமணியின் ‘வெக்கை’ நாவலை அசுரன் என்ற திரைப்படமாக்கிய வெற்றிமாறன் இந்தமுறை ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி சூரி நடிக்கும் திரைப்படத்தை இயக்குகிறார்.

மேலும் இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார் வெற்றிமாறன். இளையராஜா 8 பாடல்களை முடித்துக் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாரதிராஜா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் உடல்நிலை காரணங்களுக்காக படத்திலிருந்து விலகியுள்ளார். அவர் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிகர் கிஷோர் நடிக்க உள்ளார்.