“மாநாடு” படத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தம்…!

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து ‘மஹா’வில் நடித்து வரும் சிம்பு அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ மற்றும் நரதன் இயக்கும் ‘முஃப்தி’ தமிழ் ரீமேக் ஆகியவற்றில் நடிக்கவிருக்கிறார் .

இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இதன் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு, மலேசியாவில் 20 நாட்கள் நடைபெறவுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Bharathiraj, manadu, Simbu, suresh kamatchi
-=-