இயக்குநர் சங்கத் தலைவர் பதவி ராஜினாமா செய்தார் பாரதிராஜா…!

2017 – 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.

தலைவராக விக்ரமன் , பொதுச் செயலாளராக ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக பேரரசுவும் பதவி வகித்தனர்.

2019 – 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் குறித்த இயக்குநர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.இதில் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தனது இயக்குநர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பாரதிராஜா. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அனைவரின் பேராதரவுடன் போட்டியின்றி என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி.

ஆனால், தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகையால், ஜனநாயக முறைப்படி தலைவரைத் தேர்ந்தெடுக்க வசதியாக, எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குநராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால எனது வழிகாட்டுதலும் பேரன்பும் என்றும் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Bharathiraja, director, producer, resigned
-=-