விஜயகாந்த் பூரண நலம்பெற வாழ்த்தும் பாரதிராஜா…..!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு கொ னா அறிகுறி தென்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் :-

“நண்பர் விஜயகாந்த் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு, மிகச் சிறந்த மனிதர். அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி கவலையளிக்கிறது. அவர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பப் பிரார்த்திப்போம்” என பதிவிட்டுள்ளார் .