மதத்தின் பெயரில் நாட்டை பிளவுபடுத்தக்கூடாது: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பாஜக எம்எல்ஏ கருத்து

டெல்லி: மதத்தின் பெயரில் நாட்டை பிளவுபடுத்தக்கூடாது என்று பாஜக எம்எல்ஏ நாராயண் திரிபாதி, குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: சிஏஏ வாக்கு அரசியலுக்கு சரியானதாக இருக்கலாம், ஆனால் நாட்டுக்கு நல்லது அல்ல. இது எனது தனிப்பட்ட கருத்து.

மனசாட்சியுடன் சிஏஏவை எதிர்க்கிறேன். நாட்டின் சகோதரத்துவத்திற்கும் அமைதிக்கும் தடையாக உள்ளது. மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஒரு கிராமத்திலிருந்து வந்தவன். ஆதார் அட்டைகளை பெறுது கூட எளிதல்ல. அதற்கான ஆவணங்களை ஏராளமான மக்கள் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று பல நாட்கள் காத்திருந்திருக்கின்றனர் என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: bjp mla, citizenship act, Narayan Tripathi, குடியுரிமை சட்டம், நாராயண் திரிபாதி, பாஜக எம்எல்ஏ
-=-