Random image

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மகன் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி

மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புரட்சிக்கவிஞர் என்னும் அடைமொழியுடன் அழைக்கப்படும் மாபெரும் கவிஞர் மறைந்த பாரதிதாசன்.  இவர் மகன் மன்னர் மன்னம் புதுச்சேரியில் வசித்து வருகிறார்.    மன்னர் மன்னனும் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆவார்.  இவர் உதிவை வானொலி நிலையத்தில் பணி ஆற்றியவர்.  புதிவை தமிழ் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

தற்போது சுமார் 90 வயதாகி உள்ள மன்னர் மன்னன் முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்தார்.  இன்று அவர்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  இதனால் அவரை உடனடியாக புதிவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.   அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.