பாசனத்திற்காக பவானிசாகர் அணை 14ந்தேதி திறப்பு! முதல்வர் உத்தரவு!

சென்னை: பவானி சார் அணையின் நீர் மட்டம் 100 அடியை தாண்டியுள்ள நிலையில், அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பருவமழைகாரணமாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால்  பல அணைகள் நிரம்பி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தின் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 26 வது முறையாக 100 அடியை தாண்டியள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக அணை முழு கொள்ளளவை எட்டி இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு அணையின் நீர் மட்டம் 100 அடி தாண்டி உள்ளது.

இந்த நிலையில், அணையில்  இருந்து பாசனத்திற்காக  தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நாளை மறுநாள்  (14ந்தேதி) முதல் 120 நாட்களுக்கு அணையைத் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஈரோடு – பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் ஒற்றைப் படை மதகுகள், சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலம் பாசனம் பெறும் 1,03,500 ஏக்கர் நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு 14.8.2020 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டு உள்ளதாகவும்,  24 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.