நடிகை பாவனாவுக்கு ஜனவரி 22 ல்  திருமணம்

லையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.    அதன் பின் தீபாவளி, அசல், ஜெயம் கொண்டான் உட்பட பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.   தமிழ் மட்டும் இன்றி கன்னடப் படங்களில் இவர் நடித்துள்ளார்.   அப்போது கன்னடப் பட தயாரிப்பாளரும் கேரளாவைச் சேர்ந்தவருமான நவீன் என்பவருடன் பாவ்னாவுக்கு காதல் மலர்ந்தது.   முதலில் மறுத்த நவீன் குடும்பத்தினர் பின்னர் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர்.

அந்த சமயத்தில்  பாவ்னாவின் வாழ்வில் நிகழ்ந்த சில நிகழ்வுகளால் பாவ்னா மனம் உடைந்து போனார்.   நவீன் அவருக்கு ஆறுதலாக இருந்து அவரை சகஜ நிலைக்கு எடுத்து வருவதற்காக திருமண நிச்சய தார்த்தத்தை நடத்தினார்.    இந்த மாதம் 22ஆம் தேதி நடக்க இருந்த திருமணம் தல்ளிப் போனதாக அறிவிக்கப்பட்டது.   அது பலரிடையே பல ஊகங்களை உண்டாக்கியது.

தற்போது பாவ்னாவின் திருமணம் வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திருச்சூரில் நடக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.   குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நன்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துக் கொள்ள உள்ளனர்.   கொச்சியில் அதன் பின்பு நடக்க உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகின கலந்துக் கொள்ள உள்ளனர்.