புதுடெல்லி:

டெல்லி-சண்டிகார் இடையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சூர்ய ஒளி சார்ஜரை ‘பெல்’ (பாரத மிகுமின் நிறுவனம்) நிறுவனம் அமைத்துள்ளது.


விரைவில் எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் இயக்கும் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் ‘பெல்’ நிறுவனம் வாகனங்களுக்கான சூரிய ஒளி சார்ஜரை டெல்லி-சண்டிகார் சாலையில் அமைக்க பெல் நிறுவனம் அமைத்துள்ளது.

இத்தகைய சார்ஜர் ஒவ்வொரு 250 கி.மீ தொலைவுக்கிடையே அமைக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட சூர்ய ஒளி சார்ஜரை தொழிற்துறை செயலர் ஏஆர் சிஹாக் திறந்து வைத்தார்.

ஹரியானா பெல் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அதுல் ஷோப்டி உடன் இருந்தார்.
இந்த திட்டம் வடிவமைப்பு, பொறியியல் துறை, தயாரிப்பு, விநியோகம் மற்றும் சார்ஜர் நிலையங்கள் அமைக்கும் பணிகள் மத்திய அரசின் கண்காணிப்பின் படி நடக்கும்.

நேரடி மின் சார்ஜர் திட்டத்தையும் புதுடெல்லி உத்யோக் பவனில் ‘பெல்’ நிறுவனம் அமைத்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேரடி மின் சார்ஜர்களை அமைக்க ஆர்டர்கள் வந்துள்ளதாக பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.