பீம் ஆர்மி தலைவர் ஆசாத் தலைமையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி நாடாளுமன்றம் முற்றுகை பேரணி!

டெல்லி:

டஒதுக்கீட்டை பாதுகாக்க மத்திய அரசை  வலியுறுத்தி பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தலைமையில் நாடாளுமன்றம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதி மன்றம் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை என தீர்ப்பு வழங்கியது.

உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த 2012-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் சில அரசுப் பணியிடங்களை நிரப்ப எஸ்சி,எஸ்டி இட ஒதுக்கீடு இல்லாமல் அறிவித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அந்த அறிவிப்பை ரத்து செய்து இட ஒதுக்கீட்டுடன் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் உத்தரகாண்ட் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.ஸி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கு வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கோருவதற்கு எந்த தனிநபருக்கும் அடிப்படை உரிமை இல்லை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வு  தீர்ப்பு அளித்தது.

இந்த உத்தரவு நாடுமுழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பு குறித்து விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசு இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து,  இடஒதுக்கீட்டை பாதுக்காக்க சட்டம் இயற்றக்கோரி பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தலைமையில் தலைநகர்  டெல்லியின் மண்டி பகுதியில் இருந்து பாராளுமன்றம் வரை மாபெரும் ‘Aarakshan Bachao’ பேரணி நடைபெற்றது.  இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Bhim Army Chief Chandrashekhar Azad leads 'Aarakshan Bachao' march from Mandi House to Parliament.
-=-