பீமா கோரேகான் கலவரம்: 5 பேரின் வீட்டுக்காவல் 19ந்தேதி வரை நீட்டிப்பு
டில்லி:
பீமா கோரேகான் கலவரம் காரணமாக கைது செய்யப்ட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள இடதுசாரி சமூக ஆர்வலர்களின் காவல் மேலும் 2 நாட்கள் நீட்டித்து, உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்த் பீமா கோரேகான் கலவர வன்முறை தொடர்பாக இடதுசாரி சமூக ஆர்வலர்களான தா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் உள்பட 5 பேர் மகராஷ்டிர மாநில காவல்துறையினரால் உபா சட்டத்தில்.கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட நிலையில், பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதுகுறித்து கடித ஆதாரம் சிக்கியதாகவும் கூறி அதை ஆதாரமாக கொண்டு, கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இந்த5 பேர் மீதும, டில்லி, மும்பை, ஹைதரபாத், புனே மற்றும் ராஞ்சி என நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள். இவர்களின் பெயர்கள் அருண் பெரேரா, கவுதம் நவ்லகா, வெர்னோன் கோன்சல்வேஸ், சுதா பரத்வாஜ், வரவர ராவ் ஆகும். இவர்களின் கைது சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 153 ஏ, 505 (1) பி, 117, 120 பி, 13, 16, 18, 20, 38, 39, 40 கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
இதை எதிர்த்து, வரலாற்று ஆய்வாளர் ரோமிலா, தாப்பர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு, மகாராஷ்டிர மாநில போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ரோமிலா தாப்பர் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, வேறு ஒரு வழக்கில் ஆஜராகி இருப்பதால் கால அவகாசம் வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை வீட்டுக்காவலை நீட்டித்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “ஒவ்வொரு குற்ற விசாரணையும் குற்றச்சாட்டுகள் அடிப்படையாகக் கொண்டவை, அதில், சில விஷயங்கள் உள்ளனவா என்பதை நாங்கள் பார்க்க வேண்டும்,” என்று நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் டி.ஐ.எஸ்.சந்திரச்சாத் ஆகியோரை உள்ளடக்கிய பெஞ்ச் கூறினர்.
அதைத்தொடர்ந்து மகராஷ்டிர மாநில அரசுக்காக ஆஜரான துணைசொலிசிட்டர், ஜெனரால், துஷார் மேத்தாஆஜரானார்.
மனுதாரர், சார்பில் வாதாடிய வழக்கறிஞர், எங்களை பொருத்த வரை விசாரணை உண்மையாக நடக்கவேண்டும். அது நீதிமன்றத்தால் மட்டுமே முடியும். அதனால் தான் நாங்கள் உச்ச நீதிமன்றம் வந்துள்ளோம் எனக் கூறினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மீண்டும் செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. அன்று காவல் துறை, இந்த வழக்கு தொடர்பான குறிப்புகள் மற்றும் ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் கூறியது.