பீமா கோரேகான் கலவரம்: கைது செய்யப்பட்ட 5 பேரின் வீட்டுக்காவல் 17ந்தேதி வரை நீட்டிப்பு
டில்லி:
பீமா கோரேகான் கலவரம் காரணமாக கைது செய்யப்ட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள இடதுசாரி சமூக ஆர்வலர்களின் காவலை வரும் 17ந்தேதி வரை நீட்டித்து, உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக இடதுசாரி சமூக ஆர்வலர்கள் ள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக ஆர்வலர்களான சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோர் உபா சட்டத்தில்.கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதுதொடர்பாக மகாராஷ்டி ராவில் கைப்பற்றப்பட்ட கடிதத்தை ஆதாரமாக கொண்டு, இந்த கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கைதை எதிர்த்து, வரலாற்று ஆய்வாளர் ரோமிலா, தாப்பர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு, மகாராஷ்டிர மாநில போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதுதொடர்பான வழக்கில், மாவோயிஸ்ட்டுகளுடன் கைது செய்யப்பட்ட இடதுசாரி ஆர்வலர்கள் இடையே தொடர்பு உள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மகாராஷ்டிரா காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ரோமிலா தாப்பர், வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, வேறு ஒரு வழக்கில் ஆஜராகி இருப்பதால் கால அவகாசம் வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை வீட்டுக்காவலை நீட்டித்து உத்தரவிட்டனர்.