பீஷ்ம ஜெயலலிதாவும் துரியோதன சசிகலாவும்

நெட்டிசன்:

கார்த்தி செ அவர்களின் முகநூல் பதிவு

காபாரதத்துல பீஷ்மர்தான் அக்யூஸ்டு நம்பர் 1. காரணம் என்ன தெரியுமா?

கடவுளைத்தவிர அவரை வீழ்த்த இந்தப் புவியில் ஆளே இல்லை.!
அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்தியவர் பீஷ்மர்.

ஆனால் அவர் அதர்மத்தின் பக்கம் தலமையேற்று நின்றார்.

அவரது பக்கபலமே துரியோதனன், பாண்டவர்களுக்குச் செய்த அனைத்து அக்கிரமங்களுக்கும் காரணமாக அமைகிறது.

குருசேத்திரப் போரில் முதலில் வீழ்த்தப்பட்டவர் யார் தெரியுமா?

சர்வ வல்லமை படைத்த பீஷ்மர்தான்.

இறுதியாகத்தான் துரியோதனன் வீழ்த்தப்பட்டார்.

ஆனால் யாரும் பீஷ்மரை குற்றவாளி எனச் சொல்வதே இல்லை.

காரணம் பீஷ்மர் என்பவரின் பலத்தைத் தவறான பாதையில் பயன்படுத்தியவர்கள் கௌரவர்கள் என்பதை மக்கள் அறிவர்.

பீஷ்மர் மரணப்படுக்கையில் வீழ்த்தப்பட்டும் பாண்டவர்களும் மக்களும் ஏன் கொண்டாடினர் என்றால்,
அது துரியோதனன் என்ற மிகப்பெரிய பாதகன் இறுதியில் தண்டிக்கப்பட்டதால்தான்.

துரியோதனனுடன் பீஷ்மரும் தண்டிக்கப்பட்டார் எனத் தெரியாமலா கொண்டாடினர்.?

இன்றைய அரசியல் காட்சியில் ஜெயலலிதாவே பீஷ்மர்.
சசிகலாவே துரியோதனன்.
அவரது குடும்பமே கௌரவர்கள்.