நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் ஜெயம் ரவியின் ‘பூமி’…..!

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘பூமி’ . சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படம் ஜெயம் ரவியின் 25-வது படமாகும். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படம் விவசாயம் பற்றிய திரைக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது முறையாக லக்‌ஷ்மண்- ஜெயம் ரவி இணைந்துள்ள இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார் .மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.

இந்நிலையில் தொடர்ச்சியாக இணையதளங்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் ஜெயம் ரவியின் ‘பூமி’ யும் இணைந்துள்ளது .