பூமி ஜெயம் ரவி நடித்து வரும் 25ஆவது படமாகும். இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கியுள்ளார்.

டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.Home Movie Makers இந்த படத்தை தயாரித்துள்ளனர். நிதி அகர்வால் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். பொங்கல் அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. நாசா விண்வெளி வீரராகவும், விவசாயம் காக்கும் குடிமகனாகவும் ட்ரைலர் காட்சிகளில் வருகிறார் ஜெயம் ரவி.

இந்த படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது , இதனை முன்னிட்டு இந்த படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.