இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘பூமி’ . சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படம் ஜெயம் ரவியின் 25-வது படமாகும். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படம் விவசாயம் பற்றிய திரைக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது முறையாக லக்‌ஷ்மண்- ஜெயம் ரவி இணைந்துள்ள இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார் .மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.

இந்நிலையில் ஜெயம் ரவியின் பிறந்தநாளான இன்று படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘தமிழன் என்று சொல்லடா’ என்று தொடங்கும் இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். அனிருத், லாவண்யா, இமான் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடல் ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்திருக்கிறது.